அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆஸ்திரேலிய மாட்டிறைச்சிக்கு வரிகள் நீக்கம்
ஆஸ்திரேலியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மாட்டிறைச்சி மீதான வரிகளை நீக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் ஏற்றுமதிகளில் மாட்டிறைச்சியும் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆண்டுதோறும் 2 பில்லியன் டொலருக்கும் அதிகமான மாட்டிறைச்சியை அமெரிக்காவிற்கு ஆஸ்திரேலியா ஏற்றுமதி செய்கிறது.
இவ்வாறான நிலையில், மாட்டிறைச்சி மீதான வரிகளை இரத்து செய்வதன் மூலம் இறக்குமதியாளர்கள் செலுத்திய பணத்தைத் திரும்பப் பெற அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புதிய வரி விலக்கு பட்டியலில் மாட்டிறைச்சி மட்டுமல்லாமல், தக்காளி, கோப்பி, வாழைப்பழங்கள் போன்றவையும் அடங்கும்.
அமெரிக்காவில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டே இந்தப் பொருட்கள் மீதான வரிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டை சிரேஷ்ட செனட்டர் ரிச்சர்ட் நீல் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ட்ரம்பின் வர்த்தகப் போர்களே மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிக்க காரணம் என அவர் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





