இலங்கை செய்தி

எரிசக்தி அமைச்சரின் ‘தலை’ குறிவைப்பு: 18 ஆம் திகதி பிரேரணை கையளிப்பு!

எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு Kumara Jayakody எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை மறுதினம் 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கையளிக்கப்படவுள்ளது.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி SJP இந்த
தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

மார்ச் மாதத்துக்குரிய 2ஆவது வார நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை ஆரம்பமாகி, 20 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இந்நிலையிலேயே எம்.பிக்களிடம் நாளை கையொப்பம் பெறப்பட்டு நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை மறுதினம் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.

எரிசக்தி துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, தரமற்ற நிலக்கரி இறக்குமதி என்பன உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டே மேற்படி பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!