இலங்கை செய்தி

“ஷிரந்தியை இலக்கு வைத்து மஹிந்தவை வீழ்த்த முயற்சி”

“ஷிரந்தி ராஜபக்சவை Shiranthi Rajapaksa இலக்கு வைப்பதன்மூலம் மஹிந்தவை Mahinda Rajapaksa வீழ்த்திவிடலாம் என NPP அரசாங்கம் நினைக்கின்றது. அது ஒருபோதும் நடக்காது.”

இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே Manoj Gamage தெரிவித்தார்.

சிரிலிய விவகாரம் தொடர்பில் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால், FCID விசாரணை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இது தொடர்பான விசாரணைக்கு ஷிரந்தி ராஜபக்ச அண்மையில் அழைக்கப்பட்டிருந்தார்.

எனினும், அவர் முன்னிலையாகவில்லை. தனது சட்டத்தரணிகள் ஊடாக இரு வாரங்கள் அவகாசம் கோரி இருந்தார்.

இந்நிலையில் இன்று முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதற்கமைய அவர் இன்று FCID
சென்றார்.

இதன்போது FCID வளாகத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட மஹிந்தவின் பேச்சாளர் மனோஜ் கமகே,

“ மஹிந்த ராஜபக்சவை வீழ்த்த முடியாது என்பது ஆளுங்கட்சிக்கு தெரியும்.

அதனால்தான் அவரது பாரியாரை இலக்கு வைத்து அவருக்கு தாக்கத்தை ஏற்படுத்தலாம் என நினைக்கின்றது போலும். அதுவும் நடக்காது.

ஷிரந்தி கல்விக்கு சேவையாற்றியவர். அது பற்றி பேசப்படுவதில்லை. சிரிலிய கணக்கு பற்றியே பேசப்படுகின்றது.” எனக் குறிப்பிட்டார் Manoj Gamage.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!