பிரதமரின் வேண்டுகோளின் பின் முடிவை மாற்றிக்கொண்ட தமிம் இக்பால்
பங்களாதேஷ் அணியின் மிகச்சிறந்த தொடக்க துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான தமிம் இக்பால், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கான தனது முடிவை மாற்றியமைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்த நாட்களில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பங்களாதேஷ் விளையாடவுள்ள ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் (05ம் திகதி) விளையாடிய பின்னர் நேற்று (06ம் திகதி) தமிம் இக்பால் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
அப்போது பங்களாதேஷ் ஒருநாள் போட்டிக்கு தலைவராக இ, யாரும் நினைக்காத நேரத்தில் மிக முக்கியமான ஒரு முடிவை எடுத்தது, நேற்று சர்வதேச கிரிக்கெட் சமூகத்தின் முக்கிய தலைப்பாக மாறியது.
ஆனால் இந்த தீர்மானத்தை எடுத்ததன் பின்னர் இன்று (07) அவரும் அவரது மனைவியும் பங்களாதேஷ் பிரதமருடன் கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.
இவர்களுக்கு மேலதிகமாக, பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஸ்முல் ஹசன் மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஷ்ரப் மொர்டசா ஆகியோரும் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் இணைந்துள்ளனர்.
அந்த விவாதத்திற்குப் பிறகு, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் வேண்டுகோளின் பேரில், தமீம் மீண்டும் ஓய்வு முடிவைத் திரும்பப் பெறத் தூண்டப்பட்டதாக பங்களாதேஷ் செய்தித்தாள் டாக்கா ட்ரிப்யூன் தெரிவித்துள்ளது.
ஆனால் அவர் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் களத்தில் நுழைவதற்கு முன் மேலும் ஒன்றரை மாதம் ஓய்வு எடுப்பதாகவும், அதன்படி எதிர்வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் மீண்டும் பங்களாதேஷ் அணியுடன் இணைவார் எனவும் பங்களாதேஷில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.