அரசியல் இலங்கை செய்தி

“வடக்கிலிருந்து படைகளை முற்றாக அகற்ற தமிழ் மக்கள் எதிர்ப்பு”

” வடக்கில் இருந்து இராணுவ முகாம்களை முழுமையாக அகற்றுவதற்கு தமிழ் மக்கள் விரும்பவில்லை. அவை இருப்பதால்தான் தமக்கு பாதுகாப்பு என அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.”

இவ்வாறு முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச Wijeyadasa Rajapaksa தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

“ தைப்பொங்கல் விழாவுக்காகவே ஜனாதிபதி யாழ்ப்பாணம் சென்றார். தமிழ் மக்களின் மனங்களில் “வைரஸை” விதைத்தார். சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் என்பதை காட்ட முனைந்தார்.

ஏனைய ஜனாதிபதிகளைவிட அநுரவுக்கு வடக்கு, கிழக்கில் அதிக வாக்குகள் கிடைக்கப்பெற்றன. எனவே, தெற்கை காட்டிக்கொடுத்தாவது வடக்கை திருப்திப்படுத்தினால் போதும் என்ற குறுகிய அரசியல் சிந்தனையில் அவர் இருக்கின்றார் போலும்.

நல்லாட்சி காலத்தில் வடக்கில் காணி விடுவிக்கப்பட்டது.
காணாமல்போனோர் அலுவலகம், இழப்பீட்டு பணியகம், நல்லிணக்க அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டது.” – எனவும் விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டார்.

வடக்கில் சொற்ப அளவு காணியே விடுவிக்கப்படவிருந்தது. அதுவும் பிரச்சினை காரணமாகவே அவை விடுவிக்கப்படவில்லை. உரிமையாளர் யார் என்பது உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்தன.
வடக்கில் அல்ல தெற்கிலும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான வகையில் படை முகாம்களை அகற்ற கூடாது.

முகாம்களின் எண்ணிக்கையை நல்லாட்சி காலத்தில் குறைத்தாலும் நாம் முற்றாக நீக்கவில்லை. தேவையானவற்றை தக்க வைத்துக்கொண்டோம்.

சில தமிழ் அரசியல் வாதிகள் வலியுறுத்தினாலும் வடக்கில் இருந்து படைகளை முழுமையாக வெளியேற்றுவதற்கு அங்குள்ள மக்கள் விரும்பவில்லை.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையானளவு படைகள் இருக்க வேண்டும்;. தேவையானவைதான் வடக்கில் உள்ளன. அவற்றை அகற்றகூடாது.” -என விஜயதாச ராஜபக்ச மேலும் கூறினார்..

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!