செய்தி வட அமெரிக்கா

கனடாவில் பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள தமிழ் இளைஞர்

கனடாவில் இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக தமிழர் ஒருவர் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளர்.

Bradford West Gwillimbury நகரை சேர்ந்த இருபது வயதான ஜனார்த்தன் சிவரஞ்சன் என்பவர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2023 ஆம் ஆண்டில் நிகழ்ந்த தொடர்ச்சியான சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளதாக பிராந்திய காவல்துறை (21) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 வயதுக்கு குறைந்தவர் போல் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு இரண்டு சிறுமிகளை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

இவரினால் மேலும் சிறுமிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் காவல்துறையினர் அவரது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், சந்தேகநபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

(Visited 13 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி