தமிழக அரசு விருதுகள் அறிவிப்பு
தமிழக அரசின் 2025 மற்றும் 2026-ஆம் ஆண்டுகளுக்கான தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, 2025-ஆம் ஆண்டிற்கான ‘பேரறிஞர் அண்ணா விருது’ அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகனுக்கு வழங்கப்படவுள்ளது.
மேலும், முன்னாள் தலைமைச் செயலாளர் வெ. இறையன்புவுக்கு ‘திரு.வி.க விருது’, வழக்கறிஞர் அருள்மொழிக்கு ‘பெரியார் விருது’, மற்றும் விசிக சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வனுக்கு ‘அம்பேத்கர் விருது’ வழங்கப்படவுள்ளது.
கவிஞர் நெல்லை ஜெயந்தா மற்றும் பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோரும் முறையே பாரதியார் மற்றும் பாரதிதாசன் விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
விருது பெறுவோருக்கு 5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை மற்றும் ஒரு பவுன் தங்கப் பதக்கம் வழங்கப்படும்.
வரும் ஜனவரி 16-ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தன்று சென்னையில் நடைபெறும் விழாவில், முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த விருதுகளை வழங்கிச் சிறப்பிக்கவுள்ளார்.





