விபத்தில் சிக்கி நூலிழையில் உயிர் தப்பிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்
திண்டுக்கல்(Dindigul) மாவட்டத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டு மதுரை(Madurai) விமான நிலையத்திற்குத் திரும்பும் போது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்(M.K. Stalin) பயணம் செய்த வாகனத்தின் டயர் வெடித்ததில் அவர் மிகப்பெரிய விபத்தில் இருந்து உயிர் தப்பியுள்ளார்.
சம்பவத்தை தொடர்ந்து முதல்வர் காயமின்றி உடனடியாக வேறொரு வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் வேலுநாச்சியார்(Velunachiyar) வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, சில பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பின்னர் விமான நிலையம் திரும்பும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.





