இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் இந்தியாவில் சட்டப்பூர்வமாக தங்கலாம்!

போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை விட்டு வெளியேறிய இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள், இந்தியாவில் தாங்கள் சுதந்திரமாக வாழ வழிவகை செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், 2015 ஜன.9ம் திகதிக்கு முன்பு உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்து, அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள், சட்டப் பூர்வமாக தங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் உள்ள தண்டனை விதிகளில் இருந்தும் இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது.
இதன் மூலம், இலங்கைத் தமிழர்கள் இனி சட்டவிரோத குடியேறிகள் அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 3 times, 1 visits today)