இலங்கைக்கு மீள வர ஆசைப்படும் புலம்பெயர் தமிழர்கள்!
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அகதிகளாக தமிழ்நாட்டிற்கு தப்பிச் சென்ற குடும்பம் ஒன்று தங்களை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பக்கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் ஆட்சியரின் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மேற்படி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சரிவைத் தொடர்ந்து, மார்ச் 2022 முதல் கடல் வழியாக 300க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தமிழகத்திற்கு அகதிகளாக தப்பிச் சென்றிருந்தனர்.
தமிழக அரசு அவர்களை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைத்து, உணவு மற்றும் அடிப்படை வசதிகளை வழங்கி பராமரித்து வருகிறது.
இந்நிலையில் மன்னாரைச் சேர்ந்த குடும்பம் ஒன்று தங்களை மீள அனுப்பக்கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
முறையான சட்ட வழிகள் மூலம் தாங்கள் திரும்பி வர முயற்சிப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர், ஆனால் தமிழக அரசு இதை எளிதாக்க முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





