தெற்காசியாவிலேயே உயரமான தாமரை கோபுரம்:: பார்வையாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்
தாமரை கோபுரம் பொது மக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டதில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் 14 இலட்சம் பார்வையாளர்கள் பார்வையிடுவதற்கு வருகை தந்துள்ளனர்.
அதில், வெளிநாட்டில் இருந்து இதுவரையில் 42,297 பேர் கோபுரத்தை பார்வையிட்டுள்ளனர்.
நேற்று (24) தாமரை கோபுரத்திற்கு 7,522 பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். அதில் உள்ளூரிலிருந்து 7,285 பார்வையாளர்களும், வெளிநாட்டிலிருந்து 237 பார்வையாளர்களும் கோபுரத்தை பார்வையிட்டுள்ளனர் என தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த கோபுரத்தை நிர்மாணிப்பதற்காக சுமார் ரூ.750 கோடி (இந்திய ரூபாய் மதிப்பில்) செலவிடப்பட்டுள்ளது. இதில் ரூ.480 கோடியை சீனா நிதி உதவியாக வழங்கியது.
தாமரைக் கோபுரத்தின் அடிப் பரப்பு 30,600 சதுரஅடி. 356 மீட்டர் உயரம் கொண்டது. இந்த கோபுரம் தெற்காசியாவிலேயே உயரமான கோபுரமாக மட்டுமின்றி உலகிலேயே 19-வது பெரிய கோபுரமாகவும் பிரான்ஸ் தலை நகர் பாரிஸில் உள்ள ஈகிள் கோபு ரத்தை விட உயரமாகவும் திகழ் கிறது.