ஈரான் சரணடைந்தால் மட்டுமே பேச்சு: ட்ரம்ப் திட்டம்!
நிபந்தனையற்ற சரணடைவுக்கு இணங்கினால் மட்டுமே ஈரானுடன் பேச்சு நடத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இவ்வாறு நடந்து தகுதியான தலைமையை ஏற்றுக்கொண்டால் ஈரானை பொருளாதார ரீதியாக மேம்படுத்த உதவி வழங்கப்படும் எனவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஈரானின் தற்போதைய இக்கட்டான நிலையை மாற்றி, நட்பு நாடுகளுடன் இணைந்து அந்நாட்டை வலிமையான தேசமாக மாற்றுவதே தனது நோக்கம் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, சரணடைவதற்கு தயாரில்லை என ஈரான் ஏற்கனவே அறிவித்துள்ளது.





