உலக நீதிமன்றத்தின் கைது வாரண்டை நிராகரித்த தாலிபான்கள்
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) தனது தலைவர்களுக்கு எதிராகக் கோரிய கைது வாரண்ட் “அரசியல் ரீதியாக நோக்கம் கொண்டது” என்று ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பெண்களைத் துன்புறுத்துவதற்காக ஆப்கானிஸ்தானில் உள்ள மூத்த தாலிபான் தலைவர்களுக்கு எதிராக வாரண்ட் கோருவதாக ICC தலைமை வழக்கறிஞர் கூறிய ஒரு நாள் கழித்து இந்த நிராகரிப்பு வந்துள்ளது
“ICCஇன் பல முடிவுகளைப் போலவே, இது ஒரு நியாயமான சட்ட அடிப்படையைக் கொண்டிருக்கவில்லை, இரட்டைத் தரங்களைக் கொண்ட விஷயம் மற்றும் அரசியல் ரீதியாக நோக்கம் கொண்டது” என்று வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை சமூக ஊடக தளமான X இல் வெளியிடப்பட்டது.
“மனித உரிமைகள் குறித்த ஒரு குறிப்பிட்ட விளக்கத்தை முழு உலகத்தின் மீதும் திணிக்க முயற்சிக்கக்கூடாது, மேலும் உலகின் பிற பகுதி மக்களின் மத மற்றும் தேசிய மதிப்புகளைப் புறக்கணிக்கக்கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுளள்து.