சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆசைப்படும் தைவான் : மோதல் முடிவுக்கு வருமா?
சீனாவுடனான பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டு ஏறக்குறைய 08 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்நிலையில் மீண்டும் சீனாவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்த விரும்புவதாக தைவானின் முன்னணி ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவரான, வில்லியம் லாய் தெரிவித்துள்ளார்.
தைவானை தனது ஒருங்கிணைந்த பகுதியாக கருதும் சீனா, தொடர்ச்சியாக பல்வேறு அழுத்தங்களை கொடுத்து வருகிறது. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு தைவானும் பதிலடி கொடுத்து வருகிறது.
ஆசிய கண்டத்தில் இவ்விரு நாடுகளுக்கு இடையிலும் எந்நேரத்திலும் மோதல் வெடிக்கலாம் என்ற ஒரு போக்கே சமீப காலப்பகுதியில் நிலவி வருகிறது. இந்நிலையில் வில்லியம் லாயின் இந்த கருத்துக்கள் வரவேற்கத்தக்க ஒரு விடயமாக பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும் தைவானின் நடைமுறை சுதந்திரத்தை பராமரிக்க விரும்புவதாக வில்லியம் லாய் கூறியிருக்கிறார். “அமைதிக்கு ஆசைப்படுகையில், நாங்கள் எந்த மாயைகளையும் கொண்டிருக்கவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தைவானின் பாதுகாப்புத் தடுப்பை நாங்கள் கட்டியெழுப்புவோம், பொருளாதார பாதுகாப்பில் தைவானின் திறன்களை வலுப்படுத்துவோம், உலகெங்கிலும் உள்ள ஜனநாயக நாடுகளுடன் கூட்டாண்மைகளை மேம்படுத்துவோம் மற்றும் குறுக்கு (தைவான்) ஜலசந்தி உறவுகளில் நிலையான மற்றும் கொள்கை ரீதியான தலைமையைப் பேணுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் இந்த கருத்துக்களுக்கு சீனா இன்னும் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.