வாரத்தில் இரண்டாவது முறையாக தைவானில் 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு
தைவானின்(Taiwan) வடகிழக்கு கடலோர நகரமான யிலனில்(Yilan) இருந்து சுமார் 32 கிமீ(20 மைல்) தொலைவில் 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் தலைநகர் தைபேயில்(Taipei) கட்டிடங்களை உலுக்கியது மற்றும் 73 கிமீ (45 மைல்) ஆழத்தை ஏற்படுத்தியது என்று நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், சேதம் மற்றும் ஏதேனும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதா என்று மதிப்பீடு நடைபெறுவதாக தேசிய தீயணைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதன்கிழமை ஏற்பட்ட 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு, இந்த வாரம் தீவைத் தாக்கிய இரண்டாவது பெரிய நிலநடுக்கம் இதுவாகும்.
தொடர்புடைய செய்தி





