கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பணி இடைநீக்கம்!
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷன் பெல்லன பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சால் இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொறுப்பான பதவியில் இருந்த அவர் முன் அனுமதியின்றி ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டார் என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு ஊடகங்கள் மூலம் வெளியிடப்பட்ட அவரின் அறிவிப்புகள், பொதுமக்களிடையே சர்ச்சையையும் அமைதியின்மையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உரிய நேரத்தில் தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள […]




