இலங்கை

இலங்கையர் தினம் இரத்து?

  • December 8, 2025
  • 0 Comments

இலங்கையில் அடுத்த வாரம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த இலங்கையர் தின நிகழ்வு இரத்து செய்யப்பட்டுள்ளது என்று சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் நிலையை அடுத்தே ஜனாதிபதியால் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையர் தின நிகழ்வுகளை நடத்துவதற்காக ஒதுக்கப்பட்ட 300 மில்லியன் ரூபாயை நிவாரண நடவடிக்கைக்கு பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இம்மாதம் 12,13 மற்றும் 15 ஆம் திகதிகளில் இலங்கையர் தின நிகழ்வை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை செய்தி

எதிர்வரும் டிசம்பர் மாதம் இலங்கையர் தினம்

  • November 12, 2025
  • 0 Comments

“நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் இலங்கையர் தினம் நிகழ்வு நடைபெறுகின்றது. இதன்மூலம் இன ஒற்றுமை, மத ஒற்றுமை மேம்படுத்தப்பட்டு சமத்துவம் கட்டியெழுப்படும்.” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். அத்துடன், அரசியல் மாபியாக்களிடமிருந்து விடுபட்ட யாழ்ப்பாணத்தை உருவாக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரினார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு […]

error: Content is protected !!