டித்வா புயல்: சபாநாயகரிடம் முக்கிய கடிதம் கையளிப்பு: அடுத்து நடக்க போவது என்ன?
டித்வா புயலால் ஏற்படும் தாக்கங்களை எதிர்கொள்வதற்குரிய முன்னாயத்த நடவடிக்கைகள் இடம்பெறாமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்குமாறுகோரும் கடிதம் சபாநாயகரிடம் இன்று (18) கையளிக்கப்பட்டுள்ளது. எதிரணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்ன இக்கடிதத்தை எழுதியுள்ளார். அதனை சபாநாயகரிடம் கையளிப்பதற்காக எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட எதிரணி எம்.பிக்களையும் அவர் அழைத்துச் சென்றுள்ளார். சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளவை வருமாறு, “ டித்வா சூறாவளியால் ஏற்பட்ட உயிர் இழப்புகள், சொத்துச் சேதங்கள் […]





