டித்வா புயலிலும் “அரசியல்”?
அனர்த்தத்தை பயன்படுத்தி அரசியல் நடத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முற்படவில்லை என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பேரிடரில் இருந்து மீள்வதும், நாட்டை கட்டியெழுப்புவதுமே தற்போது முதன்மை நோக்கமாக உள்ளது எனவும் அவர் கூறினார். அனர்த்தத்தை பயன்படுத்தி அரசாங்கம் அரசியல் நடத்துவதாகவும், நிவாரண பொறிமுறை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எதிரணிகள் குற்றஞ்சாட்டிவருகின்றன. இந்நிலையிலேயே அரசாங்க ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். “ அனர்த்த நெருக்கடியின்போது அரச ஊழியர் வழங்கிய சேவை போற்றத்தக்கது. நிவாரண பணிகள் […]




