கொல்கத்தாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் இன்று (27) மதியம் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. Richter அளவுகோலில் 5.4 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கொல்கத்தாவில் இம்மாதத்தில் இது போன்ற நிலநடுக்கம் ஏற்படுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த 3 ஆம் திகதி இதேபோன்றதொரு நிலநடுக்கம் கொல்கத்தாவில் பதிவானமை குறிப்பிடத்தக்கது.




