கச்சதீவு ஆலய வருடாந்த திருவிழாவிற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி!
கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். திருவிழா தொடர்பான இறுதிக்கட்ட கலந்துரையாடல், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இன்று (24) நடைபெற்றுள்ளது. இதன்போது, இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கான தங்குமிட வசதிகள், கூடாரங்கள், உணவு வசதிகள், பாதுகாப்பு, சுகாதாரத் தேவைகள், கழிவறை வசதிகள், குடிநீர் தேவைகள், பாதுகாப்பு […]



