அரசியல் இலங்கை செய்தி

இன்னும் பாடம் கற்காத இலங்கை! ஜெய்சங்கரிடம் சஜித் கூறியது என்ன?

  • December 24, 2025
  • 0 Comments

“ சுனாமி அனர்த்தத்தில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, அனர்த்த முகாமைத்துவ திட்டத்தை உருவாக்கத் தவறியதாலேயே, டித்வா சூறாவளியில் (ditwa cyclone) அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன.” இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் (Opposition Leader) சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்தார். இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருடன் (Dr. S. Jaishankar) நேற்று நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக இந்திய அரசாங்கம் முன்னெடுத்த ‘சாகர் பந்து’ (Sagar Bandhu) திட்டத்துக்கு […]

அரசியல் இலங்கை செய்தி

கொழும்பில் களமிறங்கினார் ஜெய்சங்கர்!

  • December 22, 2025
  • 0 Comments

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இன்று மாலை (22) கொழும்பை வந்தடைந்தார். கட்டுநாயக்க   விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் தலைமையிலான இலங்கை குழுவினர், இந்திய பிரதிநிதிகளை வரவேற்றனர். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நாளை (23) சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு தூதுவராக அவர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நாளை (23) சந்திக்கவுள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கையின் அடிப்படையில் […]

இலங்கை செய்தி

மோடியின் சிறப்பு தூதுவராகவே ஜெய்சங்கர் வருகிறார்: அநுரவுடன் நாளை சந்திப்பு!

  • December 22, 2025
  • 0 Comments

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர்   (22) இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். அவரின் இலங்கை விஜயத்தை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை இன்று (22) வெளியிட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு தூதுவராக அவர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்திக்கவுள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கையின் அடிப்படையில் இவ்விஜயம் இடம்பெறுகின்றது. பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு “ ஒப்பரேஷன் சாகர் பந்து” திட்டம் ஊடாக பல்வேறு உதவிகளை […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கைக்காக களமிறங்கும் இந்தியா: ஜெய்சங்கரிடம் மோடி அனுப்பும் செய்தி என்ன?

  • December 20, 2025
  • 0 Comments

சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்துவதற்கு இலங்கை தயாராகிவரும் நிலையில், இது விடயத்தில் இந்தியா முக்கிய வகிபாகத்தை வகிக்குமென தெரியவருகின்றது. தனது இலங்கை பயணத்தின்போது கொழும்பில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஊடக சந்திப்பின்போது இது தொடர்பான அறிவிப்பை இந்திய வெளிவிவகார அமைச்சர் வெளியிடவுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட செய்தியுடனேயே எதிர்வரும் 22 அல்லது 23 ஆம் திகதி கலாநிதி எஸ். ஜெய்சங்கர் கொழும்பு வருகின்றார். பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு முதன் முதலில் இந்தியாவே நேசக்கரம் நீட்டியது. மீட்பு […]

அரசியல் இலங்கை செய்தி

திங்களன்று இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

  • December 20, 2025
  • 0 Comments

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் எதிர்வரும் திங்கட்கிழமை (22) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டியே மேற்படி தகவல் வெளியாகியுள்ளது. இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் அவர் பேச்சு நடத்தவுள்ளார். இலங்கைக்கான மேலதிக உதவித் திட்டங்கள் தொடர்பான அறிவிப்பையும் அவர் வெளியிடவுள்ளார் என தெரியவருகின்றது. இலங்கைக்கு உயர்மட்ட பிரதிநிதியொருவரை சீனா அனுப்பி இருந்த நிலையிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சரின் விஜயம் இடம்பெறுகின்றது.

error: Content is protected !!