இலங்கை

பாதீடு தொடர்பில் நவம்பர் 14 இல் முதல் பலப்பரீட்சை! 

  • November 12, 2025
  • 0 Comments

2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றுவரும் நிலையில், பாதீடு தொடர்பான முதலாவது பலப்பரீட்சையை தேசிய மக்கள் சக்தி நாளை மறுதினம் 14 ஆம் திகதி எதிர்கொள்கின்றது. 2 ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு 14 ஆம் திகதி மாலை இடம்பெறவுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த 7 ஆம் திகதி வரவு- செலவுத் திட்டத்தை முன்வைத்தார். 2 ஆம் வாசிப்புமீதான விவாதம் 8 ஆம் […]

அரசியல் இலங்கை

வரவு செலவு திட்டம்!! மகிந்த தரப்பு கடும் எதிர்ப்பு

  • November 8, 2025
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் முன்வைக்கப்பட்ட 2026 ஆம் நிதியாண்டுக்கான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வரவு- செலவுத் திட்டத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. ” மக்களை ஏமாற்றும் விதத்திலேயே வரவு- செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ” குறுகிய காலப்பகுதிக்குள் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்குரிய வேலைத்திட்டங்கள் வரவு- செலவுத் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

பாதீட்டு பற்றாக்குறை 1,757 பில்லியன் ரூபா!

  • November 8, 2025
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் வரி, மானியங்கள் உள்ளடங்களாக மொத்த வருமானமாக 5,300 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது. மீண்டெழும் செலவீனம், வட்டி உட்பட மொத்த செலவீனமாக 7,057 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய 1,757 பில்லியன் ரூபா பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது மொத்த தேசிய உற்பத்தியில் 5.1 சதவீதமாக இருக்கும். அடுத்த வருடம் 4 – 5 சதவீத பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. அரச வருமானம் மொத்த தேசிய […]

அரசியல் இலங்கை

மாகாண சபை தேர்தல் தொடர்பில் எதிர்க்கட்சி எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

  • November 8, 2025
  • 0 Comments

மாகாண சபை தேர்தலை நடத்தும் விதம் பற்றி ஆராய்ந்து இணக்கப்பாடொன்றை எட்டுவதற்காக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுமாறு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிடம், எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை விடுக்கவுள்ளார் என தெரியவருகின்றது. இது தொடர்பில் பிரதமருக்கு இன்று அல்லது நாளை எழுத்துமூலம் தெரியப்படுத்தப்படவுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு வரவு- செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், எந்த முறைமையின்கீழ் தேர்தலை நடத்த வேண்டும் என நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் […]

அரசியல் இலங்கை

ஊழல் வாதிகள் தப்ப முடியாது: ஜனாதிபதி திட்டவட்டம்!

  • November 7, 2025
  • 0 Comments

அமெரிக்காவும், ரஷ்யாவும் இணைந்து ஹிட்லரை தோற்கடித்ததுபோல, எதிரணிகள் ஒன்றிணைந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சர்வாதிகார பயணத்துக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டுமென எதிரணிகள் விடுத்த அறைகூவலுக்கு பாதீட்டு உரையில் பதிலடி கொடுத்தார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் நாடாளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்பட்டது. இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு பதிலடி கொடுத்தார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

வெளிநாட்டு நேரடி முதலீடுகள் அதிகரித்துள்ளன – ஜனாதிபதி தெரிவிப்பு

  • November 7, 2025
  • 0 Comments

இலங்கை தொடர்பில் நம்பிக்கை கட்டியெழுப்பட்டுள்ளது. அதனால்தான் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் அதிகரித்துள்ளன என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் இன்று முன்வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். “ தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் தனியார் சொத்துகள் சூறையாடப்படும் என்ற மாயை உருவாக்கப்பட்டது. ஆனால் அது போலி என்பது தற்போது நிரூபனமாகியுள்ளது. முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பட்டுள்ளது. சிறந்த முதலீடுகளைப் பெறுவதற்குரிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் […]

அரசியல் இலங்கை

ஹர்ஷவை களமிறக்கும் சஜித்: நாளை நடக்கப்போவது என்ன?

  • November 7, 2025
  • 0 Comments

2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதம் நாளை (08) ஆரம்பமாகின்றது. எதிரணி தரப்பில் இருந்தே விவாதம் ஆரம்பித்து வைக்கப்படும். ஐக்கிய மக்கள் சக்தியில் பொருளாதார விவகாரங்களைக் கையாளும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் ஆகிய இருவரில் ஒருவர் விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றவுள்ளனர். இதன்போதே வரவு- செலவுத் திட்டம் தொடர்பான பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். […]

error: Content is protected !!