இலங்கைக்காக பிரதமர் மோடி பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு! ஜெய்சங்கர் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!!
இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் பணிகளுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை வழங்கியுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இன்று (23) நடைபெற்ற சந்திப்பின்போதே இந்திய வெளிவிவகார அமைச்சர் மேற்படி தகவலை வெளியிட்டார். மேற்படி சந்திப்பு இன்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட விசேட கடிதத்தையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கையளித்தார். டீத்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களின் நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு முயற்சிகளுக்கும், […]













