தெற்கு அரசியலில் திடீர் திருப்பம்: கொழும்பை பரபரப்பாக்கியுள்ள “அரசியல் சந்திப்பு”
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றை ஒன்றிணைப்பதற்குரிய முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என அறியமுடிகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் கொழும்பில் இன்று (30) முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று நடந்துள்ளது. ரணில் விக்கிரமசிங்கவின் சகாக்களான ருவான் விஜேவர்தன, அகில விராஜ்காரியவசம் மற்றும் நவீன் திஸாநாயக்க ஆகியோர் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை அவசரமாக சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். ருவான் விஜேவர்தன ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராகவும், அகிலவிராஜ் காரியவசம் உப தலைவராகவும் பதவி […]




