இலங்கை செய்தி

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி யாழில் போராட்டம்!

  • February 7, 2026
  • 0 Comments

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலையாவதைத் தவிர்த்து வருகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தொடர்பான விவரங்களை வெளிப்படுத்தக் கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. வழக்கு விசாரணைக்காக யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை முன்னிலையாகி சாட்சியமளிக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. எனினும், வழக்கு விசாரணைக்காக […]

இலங்கை செய்தி

” உண்மை வெளிவரும் நாளே எமக்கு சுதந்திரம்” வவுனியாவில் போராட்டம்!

  • February 4, 2026
  • 0 Comments

இலங்கையின் சுதந்திர தினமான இன்று , காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வடக்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்றைய நாளை, காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்கள் கரிநாள் என நினைவு கூருகின்றோம் என  தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் கூறினர். வவுனியாவில் இன்று அவர்களது போராட்டப் பந்தலில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே சங்கப் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு கூறினர். “ இலங்கைக்கு சுதந்திரம் எங்களுக்கு விடுதலையாக அமையவில்லை. அது எங்கள் குழந்தைகள் […]

ஆஸ்திரேலியா

இஸ்ரேல் ஜனாதிபதி வருகை: சிட்னியில் போராட்டங்களுக்கு தடை!

  • February 3, 2026
  • 0 Comments

இஸ்ரேல் ஜனாதிபதியின் Isaac Herzog வருகைக்கு எதிராக சிட்னியில் போராட்டங்களை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், போராட்டங்கள்மீதான தடையை நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் நீடித்துள்ளது. சிட்னி, போண்டி கடற்கரையில் டிசம்பர் 14 ஆம் திகதி யூத சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தால் ஆஸ்திரேலியா மற்றும் இஸ்ரேலுக்கிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. யூத சமூகத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என இஸ்ரேல் வலியுறுத்தியது. இந்நிலையில் தமது நாட்டுக்கு வருகை தருமாறு […]

இலங்கை செய்தி

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக இன்று போராட்டம்!

  • February 2, 2026
  • 0 Comments

கிவுல் ஓயா திட்டத்துக்கு Kivul Oya project எதிர்ப்புத் தெரிவித்து வவுனியா – நெடுங்கேணியில் Vavuniya – Nedunkerni இன்று (02) போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கை நேரப்படி முற்பகல் 10 மணிக்கு போராட்டம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில் பங்கேற்குமாறு மக்களுக்கு ஏற்பாட்டுக்குழு அழைப்பு விடுத்துள்ளது. நெடுங்கேணி பஸ் நிலையம் முன்பாக ஒன்றுகூடும் போராட்டக்காரர்கள் அங்கிருந்து பேரணியாக நெடுங்கேணி பிரதேச செயலகம் வரை செல்லவுள்ளனர். போராட்டத்தின் நிறைவில் மனு ஒன்றும் கையளிக்கப்படவுள்ளது. குறித்த போராட்டத்துக்கு இலங்கைத் தமிழரசுக் […]

அரசியல் இலங்கை செய்தி

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு சுரேஷ் அணியும் ஆதரவு!

  • January 29, 2026
  • 0 Comments

கிவுல் ஓயா Kivul Oya project திட்டத்துக்கு எதிராக நடைபெறவுள்ள போராட்டத்துக்கு முழு ஆதரவு வழங்குவதற்கு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை கட்சியின் EPRLF தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் Suresh Premachandran வெளியிட்டுள்ளார். “கிவுல் ஓயா என்ற புதிய நீர்ப்பாசனத் திட்டம் ஒன்றை உருவாக்கி சிங்களக் குடியேற்றங்களை விஸ்தரிக்கும் நோக்கில் அமுல்படுத்த எத்தனிக்கும் இத்திட்டத்தை ஒட்டுமொத்த தமிழ் மக்களும் நிராகரிக்க வேண்டும். இதற்கு அரசு செலவு செய்ய […]

இலங்கை செய்தி

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிரான போராட்ட திகதியில் மாற்றம்!

  • January 28, 2026
  • 0 Comments

கிவுல் ஓயா திட்டத்தை நிறுத்தக் கோரி வவுனியா வடக்கின் நெடுங்கேணி பகுதியில் முன்னெடுக்கப்படவிருந்த போராட்டத்தின் திகதி மாற்றப்பட்டுள்ளது. எதிர்வரும் 30ஆம் முன்னெடுக்கப்படவிருந்த கவனவீர்ப்புப் போராட்டம், பெப்ரவரி 2ஆம் திகதி திங்கட்கிழமை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா வடக்கின் பொது அமைப்புகள் விடுத்த வேண்டுகோளுக்கமையவே திகதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்போராட்டத்துக்கு ஆதரவு வழங்குமாறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய தினத்தன்று பிரதான நகரங்களில் போராட்டம்!

  • January 26, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் பல நகரங்களில் இன்று (26) ஆயிரக்கணக்கான மக்கள் Invasion Day என அழைக்கப்படும் போராட்டப் பேரணிகளில் பங்கேற்றனர். ஜனவரி 26 ஆம் திகதி ஆஸ்திரேலிய தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. எனினும், ஆஸ்திரேலிய பூர்வக்குடி மக்களின் நில உரிமை பறிக்கப்பட்ட நாளாக பலரும் இந்நாளை கருதுகின்றனர். ஆஸ்திரேலியாவிலுள்ள அனைத்து பிரதான நகரங்களிலும் பேரணிகள் நடத்தப்பட்டன. போண்டி பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்னர் விதிக்கப்பட்டிருந்த சில போராட்டத் தடைகளில் தளர்வு வழங்கப்பட்டதாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் […]

இலங்கை செய்தி

நோயாளர்கள் பரிதவிப்பு: வைத்தியர்களின் போராட்டம் அநீதியானது என்கிறது அரசு!

  • January 23, 2026
  • 0 Comments

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை நியாயமானது அல்ல என்று பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார். நாடு முழுவதும் இன்று காலை 8 மணி முதல் 48 மணிநேர அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் வைத்தியர்கள் ஈடுபட்டுள்ளனர். இலவச சுகாதார சேவைகள் மற்றும் வைத்தியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாதாலேயே தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது எனக் கூறப்படுகின்றது. இதனால் வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவுகளுக்கு வந்த நோயாளிகள் பெரும் இன்னல்களை எதிர்கொண்டனர். எனினும், […]

உலகம் செய்தி

ஈரான்மீது அமெரிக்கா கழுகுப்பார்வை: வளைகுடா நோக்கி நகரும் படை!

  • January 23, 2026
  • 0 Comments

ஈரான்மீது அமெரிக்க தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், வளைகுடாவை நோக்கி அமெரிக்காவின் மிகப்பெரிய கடற்படை கப்பல் செல்வது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்து Switzerland , டாவோஸில் Davos நடைபெற்ற உலக பொருளாதாரமன்ற மாநாட்டில் ட்ரம்ப் Donald Trump பங்கேற்றிருந்தார். மாநாடு முடிந்த பின்னர் இன்று (23) அவர் அமெரிக்கா நோக்கி பயணமானார். நாடு திரும்பும் வழியில் விமானத்திலேயே அவர் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். “ எதுவும் நடக்க கூடாது என்பதே எனது விருப்பம். ஈரானை […]

இலங்கை செய்தி

சுகாதாரத்துறை ஸ்தம்பிக்கும் சாத்தியம்: வைத்தியர்கள் போராட்டத்தில் குதிப்பு!

  • January 22, 2026
  • 0 Comments

இலங்கையில் நாடு தழுவிய ரீதியில் நாளை (23) காலை 8 மணி முதல் 48 மணிநேரம் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் GMOA அறிவித்துள்ளது. இலவச சுகாதார சேவை மற்றும் வைத்தியர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு என்பன தொடர்பில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்பதாலேயே தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. எனினும், சிறார் வைத்தியசாலைகள், புற்றுநோயாளர் வைத்தியசாலைகளில் இப்போராட்டம் இடம்பெறாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.  

error: Content is protected !!