இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து எதிரணிகள் ஆராய்வு!

  • January 28, 2026
  • 0 Comments

“சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவது தொடர்பில் ஆராயப்பட்டுவருகின்றது.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் SJP பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார Ranjith Madduma Bandara தெரிவித்தார். இது தொடர்பில் அனைத்து எதிரணிகளுடனும் கலந்துரையாடப்படுகின்றது எனவும் அவர் இன்று (28) கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய உரிமை மீறல், பாரபட்சம் உட்பட சில காரணங்களை அடிப்படையாகக்கொண்டே பிரேரணை முன்வைப்பது குறித்து கலந்துரையாடப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிரணி கையொப்பம் திரட்டினாலும்அது இன்னும் […]

அரசியல் இலங்கை செய்தி

மக்கள் முடிவெடுத்தால் பதவி வீடு செல்ல தயார்: பிரதமர் திட்டவட்டம்!

  • January 24, 2026
  • 0 Comments

“நம்பிக்கையில்லாப் பிரேரணை தேவையில்லை, நாட்டு மக்கள் தீர்மானிக்கும் பட்சத்தில் பதவி துறந்து வீடு செல்வதற்கு தயாராகவே இருக்கின்றேன்.” – என்று பிரதமர் கலாநிதி ஹரிணி Dr. Harini Amarasooriya அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த திட்டவட்ட அறிவிப்பை வெளியிட்டார். “ ஆட்சியைக் கவிழ்த்துக்கொள்வதற்கே எதிரணி முயற்சிக்கின்றது. டிசம்பரில் புதிய ஜனாதிபதி என்றார்கள், தற்போது ஏப்ரல் என்கின்றார்கள். பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை வரும் என்கிறார்கள். எப்போது அது வரும்? அந்த பிரேரணை வரும்வரைதான் […]

அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து நாமல் விடுத்துள்ள அறிவிப்பு!

  • January 23, 2026
  • 0 Comments

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு Harini Amarasooriya எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை உரிய நேரத்தில் கையளிக்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa தெரிவித்தார். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விரைவில் கையளிக்குமாறு ஆளுங்கட்சி, எதிரணிக்கு சவால் விடுத்துவருகின்றது. எனினும், இது விடயத்தில் எதிரணிக்குள் இழுத்தடிப்பு இடம்பெறுகின்றது. இந்நிலையில் இது தொடர்பில் நாமல் ராஜபக்சவிடம் வினவப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “ நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கலந்துரையாடப்படுகின்றது. […]

அரசியல் இலங்கை

நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து சஜித் விடுத்துள்ள அறிவிப்பு!

  • January 20, 2026
  • 0 Comments

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கைவிடப்படவில்லை. அது நிச்சயம் கொண்டுவரப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa இன்று (20) அறிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவதற்கான நேரம் மற்றும் பொருத்தமான சந்தர்ப்பம் என்பவற்றை எதிர்க்கட்சியே தீர்மானிக்கும். இது விடயத்தில் அரசாங்கம் முடிவெடுக்க முடியாது. அரசாங்கம் கூறும் நேரங்களில் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர நாம் தயார் இல்லை […]

அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணை எங்கே? சஜித் அணிமீது சபையில் சாட்டையடி!

  • January 20, 2026
  • 0 Comments

“பிரதமர் கலாநிதி ஹரணி அமரசூரியவுக்கு Dr. Harani Amarasooriya எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படுமா அல்லது கைவிடப்படுமா என்பதை எதிரணி அறிவிக்க வேண்டும்.” இவ்வாறு சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க Bimal Ratnayake தெரிவித்தார். நாடாளுமன்றம் இன்று (20) முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. ஆரம்பக்கட்ட சபை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கேள்வி எழுப்பினார். “ பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிரணி […]

அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணை கைவிடப்படுமா? சஜித் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

  • January 15, 2026
  • 0 Comments

மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக முன்னெடுக்ககூடிய அத்தனை நடவடிக்கைகளையும் ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக கொண்டுவருவதற்கு உத்தேசிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிரணி கைவிடுமா என அவரிடம் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளிக்கையிலேயே எதிர்க்கட்சி தலைவர் மேற்கண்டவாறு கூறினார். “ கல்வி மறுசீரமைப்பை ஒரு வருடத்துக்கு பிற்போடுவதால் இந்த ஆட்சியின்கீழ் கல்வித்துறையில் எழுந்துள்ள பிரச்சினைகள் தீரப்போவதில்லை. பல்வேறு தரப்பினர்களுடனும் கலந்துரையாடியே கல்வி மறுசீரமைப்பு இடம்பெற […]

அரசியல் இலங்கை

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நாள் நிர்ணயம்!

  • January 14, 2026
  • 0 Comments

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு Dr. Harini Amarasooriya எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது. அமைச்சரவைப் பேச்சாளரும், ஆளுங்கட்சி பிரதம கொறடாவுமான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa நேற்று மேற்படி தகவலை வெளியிட்டார். “ பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிரணி விரைவில் முன்வைக்கும் என நம்புகின்றோம். அது தொடர்பில் இரு நாட்கள் விவாதிப்பதற்கு நாம் தயார். தேவையேற்படின் மேலும் மூன்று […]

அரசியல் இலங்கை செய்தி

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 20 ஆம் திகதியே கையளிப்பு: தாமதிக்கப்படுவது ஏன்?

  • January 11, 2026
  • 0 Comments

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு Harini Amarasooriya எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் 20 ஆம் திகதியளவிலேயே கையளிக்கப்படலாம் என தெரியவருகின்றது. நம்பிக்கையில்லாப் பிரேரணையை நேற்று முன்தினம் 9 ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கவே பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி SJP திட்டமிட்டிருந்தது. இதனையொட்டி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்தும் திரட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஏனைய சில பாடங்களிலும் உள்ள சிக்கல்கள் குறித்து ஐக்கிய மக்கள் சக்திக்கு SJP தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது என அறியமுடிகின்றது. எனவே, […]

அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு மூன்று வாக்குகளை வழங்கும் மொட்டு கட்சி!

  • January 9, 2026
  • 0 Comments

“ பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளமை பொருத்தமான அரசியல் நடவடிக்கையாகும்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் Sagara Kariyawasam தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று (09) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பொருத்தமற்ற – நெறிமுறையற்ற அரசியல் நடவடிக்கையென ஆளுங்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையிலேயே மொட்டு கட்சி செயலாளர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். “ நம்பிக்கையில்லாப் […]

அரசியல் இலங்கை செய்தி

மகாநாயக்க தேரர்களை சந்தித்த கையோடு நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து பிரதமர் விடுத்துள்ள அறிவிப்பு!

  • January 8, 2026
  • 0 Comments

தனக்கு எதிராக எதிரணிகளால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Dr. Harini Amarasooriya மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். “ இப்பிரேரணைமூலம் கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்கு மேலும் வாய்ப்பு கிட்டும்.” – என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கண்டிக்கு இன்று (08) விஜயம் மேற்கொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து கலந்துரையாடினார். இலங்கை அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ள கல்வி விவகாரம் தொடர்பில் பிரதமர் […]

error: Content is protected !!