கல்வி மறுசீரமைப்புக்கு சஜித் ஆதரவு: காலாசாரத்தை பாதுகாக்குமாறும் வலியுறுத்து!
“கல்வி சீர்திருத்தம் என்ற போர்வையில் இலவசக் கல்வியில் மனித வாழ்வியலுக்குப் பொருத்தமற்ற விடயங்கள் புகுத்தப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.” இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கரவால் C.W.W. Kannangar இலங்கையில் இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. அது இன்றைய காலத்திற்கேற்றாற்போல் மாற்றியமைக்கப்பட வேண்டும். கல்வி முறையானது நவீனத்துவம் மற்றும் புத்தாக்க ரீதியாக சீர்திருத்தப்பட வேண்டும். செயற்கை நுண்ணறிவு உட்பட பாரிய புரட்சிகர தொழில்நுட்ப மாற்றங்கள் […]




