அன்று பிரிட்டனுக்கே கடன் வழங்கியது இலங்கை : இன்று யாசகம் பெறும் நிலை!
“ 2ஆம் உலகப்போரின்போது பிரிட்டனுக்கே கடன் வழங்கிய நாடுதான் இலங்கை. ஆனால் இன்று வெளிநாடுகளிடம் யாசகம் பெறும் நிலைமையே காணப்படுகின்றது.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் (SJP) சிரேஷ்ட உப தலைவரான முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல (Lakshman Kiriella) தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ மன்னர் ஆட்சிகாலத்தில் இலங்கை தன்னிறைவடைந்திருந்தது. யாசகம் பெற்று வாழவில்லை. […]





