ஆஸ்திரேலியா

அமெரிக்காவுக்கான ஆஸ்திரேலிய தூதுவர் இராஜினாமா!

  • January 13, 2026
  • 0 Comments

அமெரிக்காவுக்கான ஆஸ்திரேலிய தூதுவர், கெவின் ரூட் Kevin Rudd , தனது பதவியை இராஜினாமா செய்வதற்கு திட்டமிட்டுள்ளார். மார்ச் மாதம்வரை அவர் வாஷிங்டனில் இருப்பார் எனவும், அதன் பின்னர் பணியை நிறைவு செய்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 31 ஆம் திகதி கெவின் ரூட் இராஜினாமா செய்வார் எனவும், அவரின் கோரிக்கையின் பிரகாரமே இதற்குரிய நடவடிக்கை இடம்பெறுகின்றது எனவும் ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanes இன்று அறிவித்தார். அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கிடையிலான உறவை கட்டியெழுப்புவதில் கெவின் ரூட் […]

இலங்கை செய்தி

“பலாலி விமான நிலையத்தில் நவீன ஸ்கேனர்”

  • January 12, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலிய எல்லைப் படையினரால் , இலங்கை சுங்க திணைக்களத்திற்கு, இரண்டு உயர் தொழில்நுட்ப “ஸ்கேனர்”கள் வழங்கப்பட்டன. காங்கேசன்துறை துறைமுகத்தில் இதற்குரிய நிகழ்வு இன்று நடைபெற்றது. இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் மேத்யூ டக்வொர்த், இலங்கை சுங்க இயக்குநர் ஜெனரல் சீவலி அருகோடவிடம் “ஸ்கேனர்”களை கையளித்தார். சுங்க இயக்குநர் ஜெனரல் பால் எட்வர்ட்ஸ், ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகள் உள்ளிட்டவர்களும் நிகழ்வில் பங்கேற்றனர். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தில் பயன்படுத்துவதற்காகவே மேற்படி ஸ்கேனர்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியா

மெல்பேர்னில் முஸ்லிம் சமூகத் தலைவருக்கு மிரட்டல்: விசாரணை தீவிரம்!

  • January 12, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ன் தென்கிழக்கு பகுதியில் இஸ்லாமிய சமூகத் தலைவர் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. இச்சம்;;பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. முஸ்லிம் சமூகத் தலைவரும், அவரது மனைவியும் வாகனமொன்றில் பயணித்துக்கொண்டிருக்கையில், மற்றுமொரு வாகனத்தில் வந்த குழுவொன்று அவர்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டுள்ளது. வாகனத்தை வழிமறித்து கீழ் இறக்கி, முஸ்லிம் விரோத சொற்பிரயோகங்கள் செய்யப்பட்டன என்று பாதிக்கப்பட்ட தம்பதியினர் தெரிவித்தனர். தமது காரை அந்த […]

ஆஸ்திரேலியா

காட்டுத் தீயால் விக்டோரியாவுக்கு பேரிழப்பு!

  • January 11, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா, விக்டோரியா மாநிலத்தில் பற்றி எரியும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு படையினர் போராடிவருகின்றனர். மத்திய விக்டோரியாவில் பேரழிவை ஏற்படுத்தும் வகையில் காட்டுத் தீ பரவிவருகின்றது. ஆயிரக்கணக்கான மக்கள் தமது வீடுகளை இழந்துள்ளனர். வனவிலங்குகளும் உயிரிழந்துவருகின்றன. இந்நிலையில் வெப்ப அலை குறைவடைந்து நாளை நிலைமை சீராகலாம் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். எனினும், எச்சரிக்கை நிலை தொடர்ந்து அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு பணியில் 15 ஆயிரம் வரையிலான தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விக்டோரியா மாநிலத்தில் உடமைகளுக்கும் […]

ஆஸ்திரேலியா செய்தி

கட்டுக்கடங்காத காட்டுத்தீ: பற்றி எரியும் விக்டோரியா!

  • January 9, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா, விக்டோரியா மாநிலத்தில் காட்டுத் தீ வேகமாக பரவிவருகின்றது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். வெப்ப அலை மற்றும் கடும் காற்றால் இன்று (09) காட்டு தீ வேகமாக பரவக்கூடும் என்பதால் மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தீ விபத்துக்கு மத்தியில் இரு மூவர் காணாமல்போயுள்ளனர் என்று மாநில அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் தீயில் சிக்கி உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது. விக்டோரியா மற்றும் நியூ சவூத் வேல்ஸ் ஆகிய மாநிலங்களுக்கு இன்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், […]

ஆஸ்திரேலியா உலகம்

பற்றி எரியும் ஆஸ்திரேலியா!

  • January 8, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் பல வருடங்களுக்கு பிறகு கடும் வெப்ப அலை உருவாகியுள்ளது. இதனால் நியூ சவுத் வேல்ஸ் உள்ளிட்ட மாநிலங்களில் காட்டுத் தீ வேகமாக பரவிவருகின்றது. விக்டோரியாவில் நாளை (9) கடும் வெப்பம் நிலவும் என்பதால் காட்டுத் தீ பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியா, விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவின் சில பகுதிகளிலும் காட்டுத் தீ வேகமாக பரவிவருகின்றது. ஆஸ்திரேலியாவில் 2019-20 இல் ஏற்பட்ட கோடைக்கால காட்டுத் தீயில் 30 இற்கு மேற்பட்டோர் பலியாகினர். பெருமளவான […]

உலகம் செய்தி

சீனாவின் பாரிய போர் பயிற்சி குறித்து ஆஸ்திரேலியா, ஜப்பான் அதிருப்தி!

  • January 1, 2026
  • 0 Comments

தாய்வானை Taiwan சுற்றியுள்ள பகுதியில் சீனா China பாரிய போர் பயிற்சியில் ஈடுபடுவது தொடர்பில் ஆஸ்திரேலியா Australia கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. சீனாவின் மேற்படி நடவடிக்கையானது பிராந்திய பதற்றத்துக்கு வழிவகுக்கும் என ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, தாய்வான் மற்றும் சீன விவகாரமானது இராஜதந்திர முயற்சிமூலம் தீர்க்கப்பட வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சீன கடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறு தீவே தாய்வானாகும். எனினும், தாய்வான் தமது நாட்டில் ஒரு பகுதியென சீனா வாதிட்டுவருகின்றது. […]

error: Content is protected !!