அடக்கி ஆள்வதற்கா அவசரகால சட்டம்?
தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் அவசரகால சட்டம் தவறாக பயன்படுத்தப்படவில்லை என்று அமைச்சர் லாந்காந்த Lankantha தெரிவித்தார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ நாட்டில் அவசரகால சட்டம் அமுலில் உள்ளது. எனினும், எந்தவொரு கட்டத்திலும் அச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படவில்லை. கடந்த காலங்களில் ஊடகங்களுக்கு எதிராக ஒடுக்கமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. ஆனால் எமது ஆட்சியில் கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்படுகின்றது. ஊடகங்கள் என்னை விமர்சித்தால்கூட அது பற்றி நான் கவலை அடையமாட்டேன். […]




