இலங்கையுடன் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துகிறது வியட்நாம்!
இலங்கைக்கும் (Sri Lanka) , வியட்நாமுக்கும் (Vietnam) இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கும் (Nalinda Jayatissa), இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் டிரின் தி டாமுக்கும் (Trinh Thi Tam) இடையிலான சந்திப்பு நேற்று (26) நடைபெற்றது. இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. மேலும் வியட்நாமின் உதவியுடன் இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. […]





