சிறுவர்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டி – உலகளவில் 03ஆம் இடத்தில் இலங்கை சிறுவன்!
சிறுவர்களுக்கான உலக டேபிள் டென்னிஸ் தரவரிசையில் இலங்கையின் தாவி சமரவீர என்ற சிறுவன் மூன்றாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு (ITTF) இந்த வாரம் வெளியிட்ட தரவரிசையின்படி, சமரவீர 52 இடங்கள் முன்னேறி 200 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
உகாண்டாவின் ஜோசப் செபதிந்திரா Joseph Sebatindira மற்றும் கத்தாரின் ரபியா அல்-குவாரி Rabeah Al-Kuwari ஆகியோரை விட அவர் பின்தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 2 times, 4 visits today)




