T20 WC – இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து போட்டி ரத்து

9வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.
இன்று பார்படாஸில் நடைபெற்ற போட்டியில் ஸ்காட்லாந்து அணி பிரபல இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது.
ஆரம்பத்தில் 20 ஓவர் கொண்ட போட்டியாக ஆரம்பிக்கப்பட்டாலும் மழை குறிக்கிட்டதால் போட்டி 10 ஓவர்களாக மாற்றப்பட்டது.
மழைக்கு மத்தியில் 10 ஓவர்கள் முடிவில் ஸ்காட்லாந்து அணி 90 ஓட்டங்களை குவித்தது.
முதல் இன்னிங்ஸ் முடிந்தவுடன் மீண்டும் மழை குறிக்கிட்டதால் இந்த போட்டி நடுவார்களால் ரத்து செய்யப்பட்டது.
ஆகையால் இரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்பட்டது.
(Visited 22 times, 1 visits today)