டி20 தொடர் – முதல் போட்டியில் இலங்கை அணி படுதோல்வி
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் முதலாவது போட்டி தம்புள்ளை(Dambulla) மைதானத்தில் நடைபெற்றது.
போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.
அந்தவகையில், முதலில் களமிறங்கிய இலங்கை அணி 19.2 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 128 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்பில் ஜனித் லியனகே(Janith Liyanage) 40 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இந்நிலையில், 129 ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 16.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அணி சார்பில், சஹிப்சதா பர்ஹான்(Sahibzada Farhan) 51 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த டி20 போட்டி ஜனவரி 9ம் திகதி தம்புள்ளை மைதானத்தில் நடைபெறவுள்ளது.





