செய்தி

T20 உலகக் கிண்ண கிரிக்கெட் – பங்களாதேஷிடம் படுதோல்வி அடைந்த இலங்கை

டலாஸில் நடைபெற்ற இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான டி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 2 விக்கெட்களால் பங்களாதேஷ் வெற்றிபெற்றது.

இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த இலங்கை சுப்பர் 8 சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெரும்பாலும் இழந்துள்ளது.

அப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 125 ஓட்டங்களைப் பெற்றது.

பெத்தும் நிஸ்ஸன்க மாத்திரமே திறமையாகத் துடுப்பெடுத்தாடி 47 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் முஸ்தாபிஸுர் ரஹ்மான் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரிஷாத் ஹொசெய்ன் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 19 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 125 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

தொளஹித் ரிதோய் 40 ஓட்டங்களையும் லிட்டன் தாஸ் 36 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் நுவன் துஷார 18 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!