T-20 உலகக்கிண்ணம்: ஸ்டீவ் ஸ்மித்துக்கு கதவடைப்பு?
T-20 உலக்கிண்ண தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு Steve Smith இடமளிக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை மற்றும் இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள T- 20 உலகக்கிண்ண தொடருக்கு முன்னதாக பாகிஸ்தான் அணியுடன் ஆஸ்திரேலியா 3 T – 20 போட்டிகளில் பலப்பரீட்சை நடத்துகின்றது.
அத்தொடருக்கான 15 வீரர்கள் அடங்கிய பெயர் பட்டியலை ஆஸ்திரேலிய கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. இதுவே உத்தேச உலகக்கிண்ண அணியாகவும் கருதப்படுகின்றது.
இந்நிலையில் 15 பேரடங்கிய அணி வீரர்கள் பட்டியலில் ஸ்டீவ் ஸ்மித்தின் பெயர் இடம்பெறாதது குறித்து அவரது ரசிகர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
எனினும், T – 20 உலக்கிண்ண தொடர்பில் அவர் அணியில் இணைத்து கொள்ளப்படலாம் எனவும், காயம் காரணமாகவே பாகிஸ்தான் தொடருக்கு உள்வாங்கப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.
2028 ஆம் ஆண்டுவரை அணிக்கு விளையாடுவதே தனது எதிர்பார்ப்பாகும் என்பதால் இறுதி நேரத்தில் இணைத்தால்கூட அணிக்காக விளையாட தயார் என ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பிக்பாஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஏன் உலகக்கிண்ண தொடரில் கதவடைப்பு இடம்பெற்றது என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாகிஸ்தான் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி விபரம் வருமாறு,
Australia’s T20 squad for Pakistan tour
Mitchell Marsh (c)
Sean Abbott
Xavier Bartlett
Mahli Beardman
Cooper Connolly
Ben Dwarshuis
Jack Edwards
Cameron Green
Travis Head
Josh Inglis
Matthew Kuhnemann
Mitch Owen
Josh Philippe
Matthew Renshaw
Matthew Short





