Systems change நாசமாகிவிட்டது: சாடுகிறார் நாமல்!
“Systems change” எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இருக்கின்ற சிஸ்டத்தையும் குழப்பியுள்ளனர். தமது இயலாமையை மூடிமறைக்கவே எம்மை இலக்கு வைக்கின்றனர்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் SLPP தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa தெரிவித்தார்.
“இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு அங்குள்ள பல்கலைக்கழகமொன்றில் சிறப்புரையாற்றுவதற்கு அழைக்கப்பட்டிருந்தேன். நானும், எமது கட்சி பிரமுகர்களும் சென்றிருந்தோம்.
இது அரசாங்கத்துக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது இறுதியானது அல்ல, இன்னும் பல நிகழ்வுகளுக்கு எதிர்காலத்தில் செல்லவுள்ளேன்.
மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை இந்த அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியாமல் போயுள்ளது. இருக்கின்ற சிஸ்டத்தையும் குழப்பி வருகின்றனர்.
ஜனவரி மாதம் என்னை சிறையில் அடைப்பார்கள் என முன்னர் எச்சரித்திருந்தனர். இதற்காககூட நான் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கலாம்.” – எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.




