வாஷிங்டன் செல்லும் சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி அகமது அல்-ஷாரா(Ahmed al-Sharaa)
சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி அகமது அல்-ஷாரா(Ahmed al-Sharaa), ஈராக்(Iraq) மற்றும் சிரியாவில்(Syria) இஸ்லாமிய அரசு அல்லது ISISக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டணியில் சேருவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாஷிங்டனுக்கு(Washington) பயணம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹ்ரைனில்(Bahrain) நடந்த பாதுகாப்பு உச்சிமாநாட்டின் போது சிரியாவிற்கான அமெரிக்க தூதர் டாம் பராக்(Tom Barrack) இடைக்கால ஜனாதிபதியின் பயணத்தை உறுதிப்படுத்தியுள்ளார்
இது சிரியத் தலைவரின் முதல் வாஷிங்டன் வருகையாகவும், அமெரிக்காவிற்கான இரண்டாவது விஜயமாகவும் அமையும் என்று டாம் பராக் குறிப்பிட்டுள்ளார்.
நீண்டகால ஆட்சியாளர் பஷர் அல்-அசாத்தை(Bashar al-Assad) கடந்த ஆண்டு இறுதியில் பதவி நீக்கம் செய்த இடைக்காலத் தலைவர், மே மாதம் டிரம்பை முதன்முறையாக ரியாத்தில் சந்தித்தார், இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க விஜயமாக அமைந்தது.





