புதிய ரூபாய் நோட்டுகளை வெளியிட்ட சிரியா
அசாத் ஆட்சிக் கால ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக மறுவடிவமைப்பு செய்யப்பட்ட புதிய தேசிய ரூபாய் நோட்டுகளை சிரியா(Syria) வெளியிட்டுள்ளது.
2024ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தின்(Bashar al-Assad) ஆட்சி கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து பரந்த பண சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக இந்த வெளியீடு அமைந்துள்ளது.
டமாஸ்கஸில்(Damascus) நடந்த ஒரு விழாவில் இடைக்கால ஜனாதிபதி அகமது அல்-ஷாரா(Ahmed al-Sharaa) மற்றும் மத்திய வங்கி ஆளுநர் அப்துல்காதர் ஹுஸ்ரீஹ்(Abdulqader Husri) ஆகியோரால் இந்த புதிய ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டது.
மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை கடந்த காலத்திலிருந்து ஒரு இடைவெளியை காட்டுகிறது. மேலும், அவை ஒரு புதிய தேசிய அடையாளத்தை பிரதிபலிக்கின்றன மற்றும் தனிநபர்களை மகிமைப்படுத்துவதில் இருந்து விலகிச் செல்கின்றன என்று ஜனாதிபதி ஷாரா குறிப்பிட்டுள்ளார்.
இப்போது நோட்டுகளில் ரோஜாக்கள், கோதுமை, ஆலிவ்கள், ஆரஞ்சுகள் மற்றும் மல்பெரி போன்ற விவசாய மற்றும் இயற்கை தொடர்பான சின்னங்கள் இடம்பெற்றுள்ளன, முந்தைய ரூபாய் நோட்டுகளில் தோன்றிய அசாத் குடும்பத்தின் உருவப்படங்கள் இல்லை.





