சிரியா விவகாரம் – டிரம்ப்புடன் இஸ்ரேல் பிரதமர் அவசர ஆலோசனை
சிரியா விவகாரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்புடன் பேசியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
தொலைபேசியிலேயே இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காஸா பகுதியில் ஹமாஸ் பிடியில் உள்ள இஸ்ரேல் மற்றும் வெளிநாட்டுப் பிணைக் கைதிகளை விடுவிப்பது குறித்தும் இருவரும் ஆலோசித்ததாக அவர் தெரிவித்தார்.
சிரியாவுடன் மோதலில் ஈடுபட விரும்பவில்லை என்றும், அந்நாட்டில் இருந்து வரக்கூடிய அச்சுறுத்தல்களை முறியடிப்பதற்கும், எல்லைப் பகுதியை பயங்கரவாத சக்திகள் கைப்பற்றுவதைத் தடுக்கவுமே தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நெதன்யாகு தெரிவித்தார்.
(Visited 1 times, 1 visits today)