சிட்னி கத்தி குத்து தாக்குதல் சம்பவம் : தாக்குதல்தாரி கைது!
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் உள்ள தேவாலயத்தில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்குதல் தாரி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள தேவாலயத்தில் கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் பாதிரியார் ஒருவரும் மற்றுமொருவரும் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனையின் போது, கறுப்பு உடையில் வந்த நபர் ஒருவர் திடீரென கத்தியால் தாக்கியுள்ளார்.
இந்த நிகழ்வு தேவாலயத்தின் சமூக ஊடகங்களில் நேரடியாக பதிவு செய்யப்பட்டது.
தாக்குதல் தாரியை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.





