ஈரான் போர் தாக்கம் – அமெரிக்காவுக்கான ஆயுத ஏற்றுமதியை சுவிட்சர்லாந்து நிறுத்தியது
ஈரானுக்கு எதிரான அமெரிக்கா–இஸ்ரேல் மோதல் தொடரும் நிலையில், சுவிட்சர்லாந்து தனது நடுநிலை கொள்கையை முன்னிறுத்தி அமெரிக்காவுக்கான ஆயுத ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அரசாங்க அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரானுடன் தொடர்புடைய சர்வதேச ஆயுத மோதலில் ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு, மோதல் முடியும் வரை போர் தளபாடங்களை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தற்போதைய சூழ்நிலையில் அமெரிக்காவுக்கு போர் தளபாடங்களை ஏற்றுமதி செய்வதற்கு அங்கீகாரம் வழங்க முடியாது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.





