இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

சுவிட்சர்லாந்தில் பொதுவெளியில் முகத்தை மறைக்கும் வகையில் உடை அணிய தடை

சுவிட்சர்லாந்து நாட்டில் மக்கள் பொதுவெளியில் முகத்தை மறைக்கும் வகையிலான உடை அணிய தடை விதிப்பது குறித்து கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த வாக்கெடுப்பில் பொதுவெளியில் முகத்தை மறைக்கும் வகையிலான உடையை அணிந்து செல்ல தடை விதிக்க வேண்டுமென பெரும்பாலானோர் (51 சதவீதம்) ஆதரவு அளித்தனர்.

இதையடுத்து, இது தொடர்பாக அந்நாட்டு அரசு கடந்த நவம்பர் 6ம் தேதி புதிய சட்டத்தை நிறைவேற்றியது. அந்த சட்டம் 2025 ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பொதுவெளியில் முகத்தை மறைக்கும் வகையிலான உடை அணிவதை தடை விதிக்கும் சட்டம் சுவிட்சர்லாந்தில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தை மீறி பொதுவெளியில் முகத்தை மறைக்கும் உடை அணிந்து செல்லும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது.

பொதுவெளியில் முகத்தை மறைக்கும் உடை அணிந்து சென்றால் அந்நாட்டு பணத்தில் 100 பிரன்சிஸ் அபராதம் விதிக்கப்படும். அபராத தொகையை உடனடியாக செலுத்தவில்லையென்றால் 1000 பிரன்சிஸ் அபராதம் விதிக்கப்படும்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!