ஐரோப்பா செய்தி

சுவிஸ் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வேட்பு மனுதாக்கல் ஆரம்பம்

சுவிஸ் 10 பிரதிநிதிகளுக்கான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வேட்பு மனுதாக்கல் தொடங்குகின்றது.

2010 ஆம் ஆண்டு முதல் தமிழீழ மக்களின் நீதிக்கும், இறையாண்மைக்குமாக ஜனநாயக வழியில் நேர்கொண்ட கொள்கையுடன் போராடிவருகின்றது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே.

அதன் நான்காவது தவணைக்கான சுவிற்சர்லாந்தின் 7 தேர்தல் தொகுதிகளில், 10 பிரதிநிதிகளுக்கான வேட்பு மனுதாக்கல் மார்ச் 15, 2024 அன்று தொடங்கவுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சுவிற்சர்லாந்து தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

சுவிற்சர்லாந்து நாட்டினை ஏழு தேர்தல் பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டு அவற்றிலிருந்து முறைப்படி 10 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவார்கள். சுவிற்சர்லாந்து நாட்டில் வாழும் தமிழ் மக்கள் செறிவைப் பொறுத்து, தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பிரிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:

1. Bern, Solothurn – 2 பிரதிநிதிகள்
2. Zürich, Schaffhaussen, Thurgau – 2 பிரதிநிதிகள்
3. Basel, Aargau, Jura – 1 பிரதிநிதி
4. Luzern, Zug, Nidwalden, Obwalden, Schwyz, Uri – 1 பிரதிநிதி
5. Vaud, Valais, Genève, Fribourg, Neuchâtel – 2 பிரதிநிதிகள்
6. Graubünden, Glarus, St – Gallen, Apenzeller – 1 பிரதிநிதி
7. Tessin – 1 பிரதிநிதி

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது தவணைக் காலத்துக்கான வேட்புமனுதாக்கல் மார்ச் 15 ஆம் நாளன்று தொடங்கி எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் திகதி நள்ளிரவு வரை வேட்பு மனுதாக்கல் ஏற்றுக் கொள்ளப்படும்.

எதிர்வரும் மே 05, 2024 அன்று பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளது. தேர்தல் நடைமுறை விதிகள், வேட்புமனுக்கள் மற்றும் இதர விடயங்கள் சுவிஸ் தேர்தல் ஆணையத்தின் குறித்த மின்னஞ்சல் வழியே பெற்றுக் கொள்ளலாம்.

மேலதிக தொடர்புகளுக்கு :
+41 79 892 87 11 / thenmoly100@gmail.com
www.tgte-us.org / www.tgte.org

நன்றி .

செல்லையா குலசேகரராஜசிங்கம்
தேர்தல் ஆணையாளர் . சுவிற்சர்லாந்து (TGTE)

(Visited 17 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி