இஸ்ரேலுக்கு எதிராக யூரோவிஷன் வெற்றி கோப்பையை திருப்பி வழங்கும் சுவிஸ் பாடகர்
அடுத்த வருட யூரோவிஷன்(Eurovision) இசைப் போட்டியில் பங்கேற்க இஸ்ரேலுக்கு(Israel) அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து, 2024ம் ஆண்டுக்கான வெற்றிக் கோப்பையைத் திருப்பித் தருவதாக சுவிஸ்(Swiss) பாடகர் நீமோ(Swiss) தெரிவித்துள்ளார்.
தி கோட்(The Code) என்ற பாடலுடன் 2024 விருது வென்ற பாடகர், ஐரோப்பிய ஒலிபரப்பு ஒன்றியத்தின் (EBU) ஜெனீவா(Geneva) தலைமையகத்திற்கு திருப்பி அனுப்புவதற்காக கோப்பையை ஒரு பெட்டியில் வைப்பதைக் காட்டும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
யூரோவிஷனை ஏற்பாடு செய்யும் ஐரோப்பிய ஒலிபரப்பு ஒன்றியம், கடந்த வாரம் இஸ்ரேலை ஆஸ்திரியாவில்(Austria) அடுத்த ஆண்டு நடைபெறும் நிகழ்வில் பங்கேற்க அனுமதித்தது, இதனால் ஸ்பெயின்(Spain), நெதர்லாந்து(Netherlands), அயர்லாந்து(Ireland), ஸ்லோவேனியா(Slovenia) மற்றும் ஐஸ்லாந்து(Iceland) ஆகிய நாடுகள் போட்டியைப் புறக்கணிப்பதாக அறிவித்த சில நாட்களுக்கு பிறகு நீமோவின் அறிவிப்பு வந்துள்ளது.
இந்நிலையில், யூரோவிஷன் பாடல் போட்டியின் இயக்குனர் மார்ட்டின் கிரீன்(Martin Green), “2024ம் ஆண்டில் முழு தகுதியுடன் வென்ற கோப்பையை நீமோ திருப்பித் தர விரும்புவது வருத்தமளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “நீமோ வெளிப்படுத்திய கருத்துக்களை நாங்கள் மதிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி




