சுவிட்சர்லாந்தில் குழந்தைகள் நல கொடுப்பனவு இரத்து?
சுவிட்சர்லாந்தில் குழந்தைகள் நல கொடுப்பனவை (ஓய்வூதியத்தை) இரத்து செய்ய நாடாளுமன்றம் ஆதரவாக உள்ளது.
இது சுவிட்சர்லாந்தை விட்டு வெளியேறி, சொந்த நாட்டிற்கு திரும்பிய ஓய்வுபெற்ற சுவிஸ் மற்றும் வெளிநாட்டில் உள்ள தொழிலாளர்களையும் பாதிக்கிறது.
சுவிட்சர்லாந்தில், பாடசாலைகள் அல்லது உயர்கல்வியில் படிக்கும் ஒவ்வொரு பிள்ளைகளின் பெற்றோர்களும் பொதுவாக 25 வயது வரை பணம் பெறுவார்கள்.
பெரும்பாலானவர்களுக்கு, ஊதியங்கள் வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்டு, சம்பளத்தில் இருந்து கழிக்கப்படும் சமூகப் பாதுகாப்பு வரிகளிலிருந்தும் நிதியளிக்கப்படுகின்றன.
எவ்வாறாயினும், யாராவது 40 வயதில் பெற்றோராக மாறினால், அவர்கள் தங்கள் குழந்தைகள் படிப்பை முடிப்பதற்குள் ஓய்வூதியம் பெறலாம்.
ஓய்வூதியம் பெறுவோர் வேலை செய்வதை நிறுத்திய பிறகும் குழந்தை ஆதரவைப் பெறுவதை உறுதிசெய்ய, வேலைவாய்ப்புடன் தொடர்பில்லாத கொடுப்பனவுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்த வாரத்தில், பாராளுமன்றத்தில் பெரும்பான்மையானவர்கள் வருடத்திற்கு சுமார் 230 மில்லியன் சுவிஸ் பிராங் செலவாகும் இந்த வேலைக்குப் பிந்தைய குழந்தை நலக் கொடுப்பனவுகளை இரத்து செய்ய முடிவு சென்ய்துள்ளனர்.