தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜெய்ப்பூரில் ரூ1.11 லட்சத்திற்கு விற்கப்படும் இனிப்பு வகை

உலகளவில் தமிழர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை தீபாவளி ஆகும். இந்த பண்டிகையின் போது இனிப்பு வகைகள், பலகாரங்களை பரிமாறிக்கொள்வது தமிழர் பண்பாடு.
இந்நிலையில், ஜெய்ப்பூரின் வைஷாலி (Vaishali) நகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு கடையில், உண்ணக்கூடிய 24 காரட் தங்கத்தால் செய்யப்பட்ட ‘ஸ்வர்ன் பாஸ்ம் பாக்’ (Swarn Basm Pak) மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட ‘சாண்டி பாஸ்ம் பாக்’ (Chaandi Basm Pak) என்ற இனிப்புப் பண்டங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த இனிப்பு வகைகள், ரூ.45,000 முதல் ரூ.1.11 லட்சத்திற்கு விற்கப்படுகிறது.
இந்த ஆடம்பரமான இனிப்புகளுக்குப் பின்னால் அஞ்சலி ஜெயின் (Anjali Jain) என்ற பெண் உள்ளார், அவர் ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய இந்திய சமையல் குறிப்புகளின் மீதான தனது ஈர்ப்பிலிருந்து இந்த யோசனை பிறந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த அஞ்சலி, “இந்த இனிப்பு இந்தியாவில் மிகவும் விலையுயர்ந்த இனிப்பு. இதன் விலை ரூ.1,11,000. இதன் தோற்றம் மற்றும் பொதியிடல் உயர்தரம் வாய்ந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.
“விளக்குகளின் பண்டிகை” என்று அழைக்கப்படும் தீபாவளி, தீமையை விட நன்மையின் வெற்றியைக் குறிக்க உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இது ராவணனை தோற்கடித்து ராமர் அயோத்திக்கு திரும்பியதை நினைவுகூர்கிறது.