ஐரோப்பா

சர்வதேச தத்தெடுப்புகளை நிறுத்துமாறு ஸ்வீடன் ஆணையம் பரிந்துரை : மன்னிப்பு கேட்டுமாறும் கோரிக்கை!

சர்வதேச தத்தெடுப்புகளை நிறுத்துமாறு ஸ்வீடன் ஆணையம் இன்று (02.06)  பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரை சமூக சேவைகள் அமைச்சர் கமிலா வால்டர்சன் கிரான்வாலுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

பல தசாப்பதங்களாக இடம்பெற்ற துஷ்பிரயோகங்கள் மற்றும் மோசடிகள் விசாரணையில் கண்டுப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து மேற்படி பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தென் கொரியாவில், நெறிமுறையற்ற நடைமுறைகள் குறித்த குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, அதன் சர்வதேச தத்தெடுப்பு கொள்கைகளை ஆய்வு செய்த சமீபத்திய நாடு ஸ்வீடன் ஆகும்.

ஸ்காண்டிநேவிய நாட்டின் சிக்கலான சர்வதேச தத்தெடுப்பு முறையை விவரிக்கும் அறிக்கையைத் தொடர்ந்து இந்த ஆணையம் 2021 இல் உருவாக்கப்பட்டது.

1970கள் முதல் 2000கள் வரையிலான ஒவ்வொரு தசாப்தத்திலும் இலங்கை, கொலம்பியா, போலந்து மற்றும் சீனா உட்பட, குழந்தை கடத்தல் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளை புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தத்தெடுக்கப்பட்டவர்களிடமும் அவர்களது குடும்பத்தினரிடமும் முறையாக மன்னிப்பு கேட்குமாறு ஆணையம் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!