லண்டனில் கைது செய்யப்பட்ட ஸ்வீடிஷ் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் விடுதலை
லண்டனில்(London) பாலஸ்தீன(Palestinian) ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட ஸ்வீடிஷ்(Swedish) ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க்(Greta Thunberg) விடுவிக்கப்பட்டதாக நகர காவல்துறை தெரிவித்துள்ளது.
பிரிட்டனை தளமாகக் கொண்ட பாலஸ்தீனத்திற்கான கைதிகள் பிரச்சாரக் குழு, “பாலஸ்தீன நடவடிக்கை கைதிகளை நான் ஆதரிக்கிறேன். இனப்படுகொலையை நான் எதிர்க்கிறேன்” என்று எழுதப்பட்ட பலகையை வைத்திருந்ததற்காக துன்பெர்க் முன்னதாக பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தது.
22 வயதான கிரேட்டா துன்பெர்க், 2018ல் ஸ்வீடிஷ் பாராளுமன்றத்தின் முன் வாராந்திர காலநிலை போராட்டங்களை நடத்திய பிறகு பிரபலமானார்.
தொடர்புடைய செய்தி
காலநிலை ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் (Greta Thunberg) பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது!





